சைவ உணவு
எல்லா துதி, கன, மகிமையும், நம்முடைய இறைவன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணருக்கே!
சைவ உணவு
குறிப்பு:
இந்த பகுதியில் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும்,
• கல்கி அவதாரமும்,
• இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையும்,
• இமாம் மகதியுமான,
ஸ்ரீ லஹரி கிருஷ்ணர் இருபது ஆண்டுகளாக கொடுத்த செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவைகளாகும்.
அனைத்து துதி, கன, மகிமையும் அவருக்கே செலுத்துகிறேன்.
இப்படிக்கு இறையன்பில்
பாபு ராம்.
******************************************
.தனிப்பட்ட விநியோகத்திற்கு மட்டும்.
• சைவ உணவு உண்ணும் பழக்கம் இந்தியாவில் தான் துவங்கியது.
• ஆயிரம் வருட அரசாட்சியின்போது சைவ உணவுதான் உண்பார்கள். சிங்கம் வைக்கோலை தின்னுமானால், பூலோகத்தார் என்ன உண்பார்கள். கீழ்கண்ட வசனங்களைப்படியுங்கள்.
ஏசாயா அதிகாரம் 11:6 - அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.7 - பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.8 - பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,9 - என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
• மனிதர்கள் மத்தியிலும், சகல ஜீவராசிகளின்மேல் அன்பும், தழைத்தோங்க வேண்டும். ஆயிரம்வருடஅரசாட்சியின்போது கொலைகள் இருக்காது. ஏனெனில், சாத்தான் கட்டப்பட்டுவிடுவான். சைவ உணவு உண்பதன் மூலம் நாம் ஏதோ விசேஷமான மகிமையை தேவனுக்கு செலுத்திவிடுவோம் என்பது அல்ல விஷயம். ஆனால் நம்மை ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வைக்கும். மேலும் தேவனுக்கேற்ற காரியங்களை இன்னும் அதிகமான வீரியத்துடன் நம்மை செய்யவைக்கும்.
• இந்துக்களும், அஹிம்சையும், சைவ ஆகாரமும் ஒன்றாய் செல்லும்.
• சைவ உணவை உண்பதற்கு ஏற்றவாறு தான் நமது பல்வரிசைகளும், ஜீரண உறுப்புக்களும் அமைந்து இருக்கின்றன.
சைவ உணவு
நான் இன்று சைவஉணவை மட்டுமே உண்பவனாய் இருக்கிறேன். அது எனக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுப்பதை உணருகிறேன்.
நாம் கொழுத்திருக்கும்படி, மற்றொரு ஜீவராசியை கொல்வது, உங்களிடம்கிருபை இல்லாததை காட்டுகிறது. கிருபை என்றால், எந்த ஜீவராசியையும் கொல்லாதிருத்தல். கொள்பவர்களிடம் கிருபை இருக்காது. நீங்கள் மாமிசம் உண்டால் நரகம் உங்களை வெளியே விடாது. ஏனெனில் நீங்கள் நரகத்தில் ஒரு கைதியாக இருப்பீர்கள். ஏனெனில், கொலைசெய்யாதிருப்பாயாக என்பதே கடைசி கற்பனையாய் இருக்கிறது.
ahத்திராகமம்; 20:13 nfhiynra;ahjpUg;ghahf.
நீங்கள் மாமிசம் உண்ணக்கூடாது. நீங்கள் நன்றாக சிந்திப்பீர்களானால், அந்த மாமிசம் இன்னொரு ஜீவராசியின் ஆத்துமாவாய் இருக்கிறது. நீங்கள் இன்னொரு ஆத்துமாவை உண்கிறீர்கள்.
பாவத்தில் இருந்து விடுபடும் ஞானத்தை பெற்றவர்கள், ஜீவனற்ற ஒரு உடலை தின்னார்கள். உயிரற்ற உடலை தொடுவதும் தீட்டல்லவா?
லேவியராகமம் 11:39 உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.40அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
அசுத்த மிருகங்கள் மட்டுமல்ல, நாம் உண்ணக்கூடிய மிருங்கங்கள் என்று சொல்லப்பட்ட மிருகங்களின் செத்த உடலைக்கூட நாம் தொடும்போது தீட்டுபடுகிறோம். அப்படியானால் தேவன் மறைவான முறையில் நாம் மாமிசம் உண்ணக்கூடாது என்கிறார் என்பது தெளிவாகிறது அல்லவா?
மாமிசம் உண்பவன், சிங்கம் போன்ற பலம் உள்ளவனாகலாம். ஆனால், அவனுக்கு சிங்கம்போல பலமிருப்பினும், ‘இச்சையடக்கம்’ இருக்காது. ‘இச்சையடக்கம்’– ஆவியின் கனியாகும்.‘இச்சையடக்கம்’இல்லாதவன், தேவ ஆவி இல்லாதவன்.
கலாத்தியர் 5:22 - ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,23 - சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
இறைவன் எல்லாவிடத்திலும் இருக்கிறார் என்கிறோம். அவர் கோழியிலும் இருக்கிறார் அல்லவா? நீங்கள் ‘சிக்கென் கறி’ சாப்பிடும் போது அதனுள் இறைவனும் இருக்கிறார் என்று நீங்கள் ஏன் உணர்வதில்லை?
மீனாகட்டும், ஆடாகட்டும், மாடாகட்டும், கொழியாகட்டும், இவைகள் செத்த பிறகு தானே நீங்கள் அவற்றை சாப்பிடுகிறீர்கள்? ஒரு உயிர் செத்தால் அது பிணம். அப்படியானால் நீங்கள் பிணத்தையல்லவா சாப்பிடுகிறீர்கள்???
நானும் ஒருகாலத்தில் மாமிசவுணவு உண்டவன் தான். ஆனால் இவைகளை நான் உணர்ந்தபிறகு முழுக்க சைவமாகிவிட்டேன். சைவம் எனக்கு இப்பொழுது பிரியமானதாகிவிட்டது.
இறைவன் அன்பே உருவானவர். அவரை எவன் அறிகிறானோ, அவன் ஜீவகாருண்யத்திற்குள் வந்துவிடுவான். நீங்கள் இறைவனை அறிந்துகொண்டீர்களா?
மாமிசம் உண்பதால் தான் ஜனங்கள் விரைவில் சாகிறார்கள்.
சகல ஜீவராசிகளின் மீதும் அன்பு செலுத்தும் இடத்தில் தான் உண்மையான மதம் துவங்குகிறது. உங்களிடத்தில் ஜீவகாருண்யம் இல்லாவிட்டால், உங்களிடத்தில் எத்தகைய தேவன் இருக்கிறார் என்று எனக்குப்புரியவில்லை!
ஜீவஹிம்சை பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே,
1. காலரா வியாதி வந்தவன், காலரா கிருமிகள் கொல்லப்படாமல் எப்படிப்பிழைப்பான்?
2. கொசுகடித்தால் நாம் குட்நைட், டார்ட்டாய்ஸ், மார்டின், போன்ற மருந்துகளால் கொல்கிறோமே?
3. மூட்டைப்பூச்சியை பேகான்ஸ்பிரே கொண்டு கொல்லாவிட்டால் நாம் நிம்மதியாக தூங்கக்கூட முடியாதே?
இவ்வாறெல்லாம் நீங்கள் கேட்கலாம். அந்த மகத்தான ஜீவிதிதத்திற்குள் நீங்கள் வரவேண்டும்.
• நீங்கள் ஆவியில் ஆழமாக முன்னேறி கர்த்தருக்குள் ஜீவிக்கையில் உங்களை எந்த காலரா கிருமியும் தாக்காது.
• வீட்டைசுற்றி தண்ணீர் தேங்காமலும், அடர்த்தியான செடிகள் இல்லாமலும் பார்த்துக்கொண்டால், கொசு ஏன் வரப்போகிறது?!
• வீட்டில் துணிகளை ஒழுங்காக துவைத்து மடித்துவைத்து, வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால், மூட்டைப்பூச்சி ஏன் வரப்போகிறது?!
நீங்கள் நன்றாக கவனித்தால், பசு, அல்லது எருது, புல்லையும் வைக்கோலையுமே தின்கின்றன. ஆனால் ஆவிகள் எலும்புகள் எவ்வளவு உறுதியாய் இருக்கின்றன! ஒரு மாட்டிடம் ஒருமுறை ஒரு முட்டுவாங்கிப்பாருங்களேன்.
யானை இல்லை தழைகளை மட்டுமே உண்கிறது. ஆனால் அதன் துதிக்கையால் நம்மை ஒரு சுழற்று சுழற்றினால் நாம் என்ன ஆவோம்? சற்று சிந்தித்து பாருங்கள்.
ஆனால் நாமோ, மாமிச உணவு தின்றால்தான் பலமாடைவோம் என்று நம்பி அதனை தின்றுகொண்டிருக்கிறோம்.
இறைவன் உண்மையில் நம்மை எதை உண்ணும்படி கூறினார்?
ஆதியாகமம்25 தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். 28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
ஆளத்தான் சொன்னார்; கொன்று தின்னச்சொல்லவில்லை.
29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
அப்படியானால் நாம் உண்மையில் கீரைவகைகளையும், பழங்களையும் மட்டுமே உண்ணவேண்டும் என்பது இதன் மூலம் புரிகிறது.
இன்னும் சரியாக சொல்லப்போனால், நாம் விதைகளைகூட உண்ணக்கூடாது. இக்காலத்தில், ரத்தக்கொதிப்பு நோய் [Blood pressure] கிட்டத்தட்ட எல்லோருக்கும் இருக்கிறது. இன்னும் மாரடைப்பு நோய் [Heart attack] கூடவருகிறது. இதன் காரணம் என்ன? நாம் சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய், விதைகளில் இருந்து தானே தயாராகிறது? நாம் தேவனுடைய கட்டளையை மீறி விதைகளை உபயோகிப்பதனால் இத்தகைய வியாதிகள் வருகின்றன.
நீங்கள் ஆரோக்கியத்தை விரும்பினால், காய்கறிகள், பழவகைகள், கோதுமை, ராகி, கீரைவகைகள், போன்றவற்றை உண்ணுங்கள்.
சைவ உணவு உண்பவர்களுக்கு, மூலவியாதி, ரத்தக்கொதிப்பு போன்றவை வராது.
ஆதாமும், ஏவாளும், ஏதேன் தோட்டத்தில் இருக்கும்போது, அவர்கள் சைவ உணவுதானே உண்டார்கள்?
இறையன்பில்
உங்கள் சகோதரன்
பாபு ராம்.
God Part Three FOUR TYPES OF BHAKTAS As per Bhagawad Gita, there are four types of Devotees who seek God. Bhagawad Gita mentions about four types of Bhaktas in chapter 7: 16-18 “Four types of devotees of noble deeds worship Me, Arjuna, the seeker after worldly possessions, the afflicted, the seeker of knowledge, and the man of wisdom (one who has known God, and starts loving Him with all his Heart), O best of Bharatas. (16) Of these the best is the man of wisdom, ever established in identity with Me and possessed of exclusive devotion. For I am extremely dear to the wise man (who knows me in reality), and he is extremely dear to Me. (17) Indeed all these are noble, but the man of wisdom is My very self; such is My view. For such a devotee, who has his mind and intellect merged in Me, is firmly established in Me alone, the highest goal. (18)” So the Lord loves only those who know Him and Loves Him in reality. Hence in order to receive the love of the Lord, it is ...
Comments
Post a Comment