நாம் ஒரு நபரை சந்திக்க அவரது வீட்டிற்கு செல்லும்போது
அவர் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு உரிய பாதையை அங்கிருக்கும் வழிகாட்டி பலகையின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
அந்த வழிகாட்டி காட்டும் திசையில் சென்றால் அந்த நபரின் வீட்டை கண்டுபிடித்து அவருடம் பேசலாம்.
ஆனால் நாம் அவ்வாறு செய்யாமல்
அந்த வழிகாட்டும் பலகையையே சுற்றி சுற்றி வந்தால் நாம் போகவேண்டிய இடத்திற்கு சென்று அந்த நபரை சந்திக்க முடியாது.
சாய்பாபா, வள்ளளார், ராம்ச்சந்தர்ஜீ, முத்துக்குட்டி சாமி, வீரப் ப்ரஹ்மம், போன்ற தீர்க்கதரிசிகள் அந்த வழிகாட்டி பலகையை போன்றவர்கள்.
நாம் அவர்கள் காட்டும் பாதையில் சென்று "உண்மையான இறைவனை" அறிந்துகொள்ள வேண்டும்.
அதை செய்யாமல், இந்த தீர்க்கதரிசிகளையே தெய்வம் என்று வணங்கிக்கொண்டு அவர்களையே சுற்றி சுற்றி வந்தால் நாம் உண்மையான இறைவனை ஒருக்காலும் அடைய முடியாது.
Comments
Post a Comment